கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளில் எஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சவால்கள் எழுந்துள்ளன. இதனால் இதயநோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சனக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த இயந்திரங்கள் பழுதடைந்து 6 மாதங்களாகியும் இன்னும் பழுது நீக்கப்படாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.