மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான தடகள விளையாட்டுப் போட்டி 27.04.2024 அன்று வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து ஆறு மாற்றுத்திறனாளிகள் பங்கு பற்றியதில் ஏழு தங்கப் பதக்கத்தையும், மூன்று வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினர்.
17 வயதிற்கு மேற்பட்ட ஒற்றைக் கால் இழந்தவர்களுக்கான போட்டியில் எம். எம் றபீக் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி மற்றும் பரிதி வட்டம் வீசுதலில் தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினார். உயரம் குறைந்த நபர்களுக்கான போட்டியில் என்.பக்ஸா பரிதி வட்டம் வீசுதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கப்பதக்கத்தினை கைப்பற்றினார்.
காது மற்றும் வாய் பேசாதோர் போட்டியில் எம்.எப் நாஸா 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் மற்றும் MR போட்டியில் பங்கு பற்றிய எஸ்.எம்.அர்ஹாம் 100 மீட்டர், 200 மீட்டர், குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் கைப்பற்றியுள்ளதுடன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீமின் வழிகாட்டலுக்கமைய சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் நி.கனலோஜினி இவர்களுக்கு பயிற்சி வழங்கி ஒழுங்கு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇