நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளி பாதிப்புகளுக்குப் பின்னர், இன்று (05.01.2026) புதிய பாடசாலைத் தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக வட்டவல முதல் நாவலப்பிட்டி வரை புதிய பயணிகள் புகையிரத சேவை இன்று (05.01.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அதிகாலை 5:15 மணிக்கு வட்டவல புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் இந்த புகையிரதம் காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தைச் சென்றடையும்.

அதன் பின்பு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு வட்டவல நோக்கி பயணிக்கும் வகையில் புகையிரதக் கட்டுப்பாட்டு அறையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் குறித்த புகையிரத சேவையை ஹட்டன் புகையிரத நிலையம் வரை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects