“இலங்கை வணிகங்களுக்கான காலநிலை அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் ” என்ற தொனிப்பொருளில் இலங்கையின் முதலாவது காலநிலை உச்சி மாநாடு 2024 ஐ எதிர்வரும் மே 7 முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இலங்கை வர்த்தக சம்மேளனம் நடாத்தவுள்ளது.
காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அபாயங்கள் மற்றும் இலங்கை வணிகங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகள் குறித்த தேசிய உரையாடலுக்கான தளமாக குறித்த உச்சி மாநாடு காணப்படும்.
பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உச்சி மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றி, மாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்களுக்கான பொருத்தமான சூழலை ஏற்படுத்தவுள்ளார்.
இம் மூன்று நாள் மாநாட்டில் காலநிலை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள், காலநிலை அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் , இடர்களை தணிக்க தேவையான வசதிகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்தும் தற்போதைய உலகில் இலங்கையின் பணிகள் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான செயலுக்க கொள்கை நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது ஆராயப்பட உள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇