அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்குமான சர்வதேச இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறு பிரிவுகளின் கீழ் 41 வீரர்கள் புதிய ஒப்பந்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளர்.
அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 100% உயர்த்தப்பட்டு, அவர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.
மேலும், ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சமநிலை அல்லது தோல்வி என்பதைப் பொறுத்து கட்டண முறைகள் மாறுபடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கொடுப்பனவும் 25 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை அமைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை வருமாறு…
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇