“கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் முன்னெடுத்துவரும் தன்னார்வ மனிதநேயச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக மட்/மமே/கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான பொருட்கள் 04 – 10 – 2023 அன்று வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொறுப்பாசிரியரும், மாணவர்களும், ஈகை அமைப்பைச் சேர்ந்ந தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
அப்பியாசப் புத்தகங்கள், எழுதுகோல்கள் உட்பட கற்றலுக்குத் தேவையான பல்வேறு உபகரணங்கள் கொடை வள்ளல்களாலும், சமூக நலன் விரும்பிகளாலும் அன்பளிப்புச் செய்யப்பட்டிந்ததாக ”ஈகை” அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள் – ஈகை அமைப்பினர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…
One Response
Good job guys.