எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார்.
பாதீட்டினூடாக மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறைகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் தமது கடமை நேரத்துக்கு மேலதிகமாக பணிபுரியவில்லையாயின், நாட்டில் மருத்துவ சேவைகளைப் பராமரிப்பது சாத்தியமற்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதும் வைத்தியர்களுக்கு பணிக்கு ஏற்ற போதுமான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை எனவும் இதுகுறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










