அஸ்வசும இரண்டாம் கட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால் வடமாகாணத்தில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அனுப்பியவர்களின் தகவல்களை சரி பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இருந்து கிராம அலுவலர்கள் ஒதுங்கி உள்ளனர். தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அரசின் மானிய திட்டத்தில் சேர மாட்டோம் என கிராம அலுவலர்கள் கூறுகின்றனர்.
அஸ்வசும இரண்டாம் கட்டத்தின் கீழ் நான்கரை இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இருபத்து நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பலன்கள் வழங்கப்பட உள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇