எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமுகமாக இன்று (05.06.2024) முதல் சாப்பாட்டுப் பார்சல் , மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முட்டை ரொட்டி உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டி வகைகளின் விலைகள் 10 ரூபாவினாலும், தேநீரின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.