பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிப்பு – அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு சீ.டி ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்ததன் காரணமாக குறித்த சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வருடாந்த சேவை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமையால், குறித்த இயந்திரத்தை சீர்செய்வதில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சி.டி.ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், தற்போது சிகிச்சையளிப்பதற்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கான உரிய தீர்வு விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects