கொழும்பின் பல பகுதிகளில் 04.07.2024 அன்று முதல் 18 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பதலையிலிருந்து செல்லும் நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவை சரிசெய்வதற்காகவே இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொலன்னாவ, கடுவெல, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும்.
நீர் விநியோகத் தடையானது 04.07.2024 அன்று இரவு 9.00 மணி முதல் இன்று (05.07.2024) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇