அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
புகையை அதிகளவில் வெளியிடும் வகையில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த வாகனங்கள் தொடர்பில் 070 35 00 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டாமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிக புகை வெளியேறுவது அவதானிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇