கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
விவசாய ஏற்றுமதி வருமானத்தின் பாதகமான நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் விவசாய ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇