உத்தேச ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்றைய தினம் (17.07.2024) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் 16.07.2024 அன்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமாகியுள்ள பின்னணியில் இச் சந்திப்பு இடம்பெறுகிறது.
தேர்தல் தொடர்பான பல அடிப்படை ஆவணங்கள், அச்சிடல் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇