இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு 1,019,642 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும், மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேர் வருகை தந்துள்ளனர்.
ஜூலை 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,574 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25.2 சதவீதம் ஆகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇