அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் 25.07.2024 அன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பான கூட்டம் நாளை முற்பகல் வேளையில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மற்றும் அதன் திகதியை தீர்மானிப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் முதன்மையாக நடத்தப்படவுள்ளதுடன், அதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇