எண்ணங்களின் மூலம் நவீன தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதே மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப்பின் நோக்கம்.
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த மின்னணு சாதனத்தை மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர், குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு நியூராலிங்க் நிறுவனம் சோதனை செய்திருந்தது.
தற்போது மனித மூளையில் சீப்பைப் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றது
நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களின் மூலம் ஸ்மார்ட்போன் உட்பட நவீன தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதே மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப் வடிவமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் கைப்பேசிகளே இருக்காது என்றும் நியூராலிங்க் மட்டுமே இருக்கும் என்றும் எலான் மஸ்க் பதிவொன்றின் மூலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், விபத்தொன்றினால் தோள்பட்டைகளுக்குக் கீழே செயலிழந்துவிட்ட நோலண்ட் அர்பாக் என்பவருக்குக் கடந்த ஜனவரி மாதம் நியூராலிங்க் சிப் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு நபருக்கு நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டுள்ளது என்ற தகவலை நியூராலிங் இணை நிறுவனரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் முதுகில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டோருக்கு நியூராலிங்க் சிப் பொருத்துவது பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகுந்த பாதுகாப்பானது எனக் கூறும் எலான் மஸ்க், எதிர்காலத்தில் பெரும்பாலானவர்கள் நியூராலிங்க் சீப்பைப் பொருத்திக்கொள்ள விரும்புவார்கள் என்றும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வருடத்தில் மேலும் 8 பேருக்கு நியூராலிங்க் சிப் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇