மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க திருமதி.ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கலாநிதி அஜித் ரோகன ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந் நிகழ்வில் மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்பினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலத்துங்க, 24ம் காலாட்படை பொது அலுவலக தளபதி மேஜர் ஜெனரல் அணில் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.ஜெகத் விஷான்த், 243ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான கலந்து கொண்டனர் .
இதன் போது சிவில் சமூக அமைப்பின் அபிவிருத்தி அடைவுகள் செயற்றிட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் அமைப்பின் உள்நாட்டு திட்ட இணைப்பாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஆர்.கிருபராஜாவினால் அளிக்கை செய்யப்பட்டது.
மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.