நாளை (15.08.2024) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று (14.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அச் சங்கத்தின் செயலாளர் அஜித். கே. திலகரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளை உடனடியாக செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇