ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக, இலங்கைக்கான தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதானியாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோரை (Nacho Sánchez Amor) ஐரோப்பிய ஒன்றியம் நியமித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காகத் தேர்தல் கண்காணிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் தேர்தல் செயல்முறைகளை சுமார் 6 சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇