சென்னை விமான நிலையத்துக்கும் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை 01.09.2024 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பலாலி வரையில் குறித்த விமான சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமானமானது 52 பயணிகளுடன் இன்று பிற்பகல் பலாலியை வந்தடைந்துள்ளது.
பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டது.
பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇