நாட்டில் வருடம்தோறும் அறுவடை மற்றும் விற்பணைகளுக்கு பின்னர் ரூ.180 பில்லியன் பெறுமதியளவிலான பழங்களும் மரக்கறிகளும் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
இந்த நிலையில், இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் மரக்கறிகள் நாட்டில் வாழும் மக்களுக்கு இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு உணவளிக்க போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், போக்குவரத்தின் போது மாத்திரம் ஆண்டுதோறும் 500,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பழங்கள் மற்றும் மரக்கறிகள் வீண்விரயமாகின்றன.
அத்தோடு, அறுவடைகளின் போதும் சுமார் 30 சதவீதம் தொடக்கம் 40 சதவீத வரையிலான பழங்கள் மற்றும் மரக்கறிகள் வீண்விரயமாகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பாரியளவில் விளைவுகளை சந்திக்கின்றனர்.
இருப்பினும், விவசாயிகள், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறுவதாலேயே பழங்கள் மற்றும் மரக்கறிகள் வீண்விரயமாக்கப்படுகின்றன.
மேலும், விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் 5.7 சதவீதமா பழங்கள் மற்றும் மரக்கறிகள் வீணாகுவதை தடுக்கலாம் என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










