நாடளாவிய ரீதியில் கடந்த 8 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 16 ஆயிரத்து 530 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 13 கோடியே 61 இலட்சத்து 59 ஆயிரத்து 999 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாண் தொடர்பாக ஆயிரத்து 557 சோதனைகளும், அரிசி தொடர்பாக 2 ஆயிரத்து 382 சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇