செவ்வாய் பாறைகளுக்கு கீழ் திரவ நீர் கண்டுபிடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளில் கடலுக்கு நிகரான நீர் கொள்ளளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2018 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாசாவின் இன்சைட் லேண்டர் (Mars Insight Lander) என்ற ரோபோ பதிவு செய்திருந்த நில அதிர்வு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஜேர்னல் கடந்த 12.08.2024 அன்று வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில், பாறை கிரகங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் நோக்கத்துடன் ரோபோ இன்சைட் லேண்டர் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.

நில அதிர்வுகளைக் கண்டறியும் அளவீட்டைக் கொண்டுள்ள இந்த ரோபோ மூலம் செவ்வாய்க் கிரகத்தில் 1,319க்கும் மேற்பட்ட பூகம்பங்களின் தரவுகளைச் சேகரிக்க முடிந்தது. அந்த நிலநடுக்கங்களுக்கு MARSQUAKE என்று பெயரிடப்பட்டுள்ளது.

2022 இல் முடிவடைந்த “இன்சைட் மிஷன்“ அதன் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபிறகு, செவ்வாய்க் கிரகத்தின் உட்புறத்தில் கடலின் கொள்ளளவு கொண்ட நீர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 10 முதல் 20 கி.மீ ஆழத்தில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தின் துருவங்களுக்கு அருகில் வளிமண்டலத்தில் பனி மற்றும் நீராவி இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

ஆனால் அங்குத் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

எவ்வாறாயினும், சுமார் 3 பில்லியன் வருடங்களாகப் பாலைவனமாக மாறியுள்ள செவ்வாய்க் கிரகத்தில் உள்ள நீருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects