மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுதினம் 27.02.2025 அன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 அன்று நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல் நடைபெறுமெனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்திலும் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் 20.02.2025 அன்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி அதற்கான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










