இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தற்போதைய செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைவராகப் பதவியேற்றவுடன் ஏற்படவுள்ள செயலாளர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது குறித்த கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான நிகழ்ச்சி நிரலில் செயலாளருக்கான வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பான கலந்துரையாடல் உள்வாங்கப்படாததன் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய செயலாளர் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பொதுக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇