இஸ்ரேலில் விவசாய துறையில் 2,252 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை இளைஞர்களுக்கு 5 வருடங்கள் 5 மாத காலத்திற்கு இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, செப்டெம்பர் 12 மற்றும் 18 ஆம் திகதிகளில் இஸ்ரேல் செல்லவிருக்கும் 69 இளைஞர்களுக்கு 09.09.2024 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் விமான டிக்கெட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இஸ்ரேலில் தொழிலுக்காக இலங்கை அரசாங்கம் சார்பாக பணியகத்தினால் நபர்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், தொழிலாளர்கள் இஸ்ரேலின் ஃபிபா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் சீட்டிழுப்பு ஊடாக தெரிவு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களின் மேலதிக பணிகள் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு பணிக்கு அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரு அரசாங்கங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த வேலைகளுக்கு தொழிலாளர்களை நியமிக்க வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், இந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇