மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் மூலம் நெடுநாள் மற்றும் ஒரு நாள் படகுகளுக்காக எரிபொருள் மானியம் மாதந்தோறும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியம் வைப்பிலிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதுடன், உற்பத்தி செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇