எதிர் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் 02.10.2024 அன்று நடைபெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியானின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது தேர்தல்களின் போது பாதுகாப்பு விடையங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவூபடுத்தப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் விஷாந்த, பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇