தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்ல சட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,
அவ்வாறு உடன் அழைத்துச் செல்லும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், உதவியாளர் ஒருவரோடு வருகைதருவதற்கும் இயலாத வாக்காளர்கள், பழைய முறைப்படி வாக்கெடுப்பு நிலைய அலுவலர் ஒருவரின் முன்னிலையில் தலைமை தாங்கும் அலுவலர் ஊடாக தனது வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்கு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇