அடுத்த வருடம் சோள இறக்குமதியை 150,000 மெற்றிக் தொண்னாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது வருடாந்தம் சுமார் 300,000 மெற்றிக் தொண் சோளத்தை இறக்குமதி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோள இறக்குமதி செலவுக்காக ஒதுக்கப்படும் அந்நியச் செலாவணியைக் குறைக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், தற்போது சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விதைகளை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇