2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொகைமதிப்பு , புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் , 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் “கட்டிட” நிரல்படுத்தலுக்கமைய நாட்டில் மொத்தமாக 8,377,895 கட்டிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ரீதியான வீட்டுக்கூறுகளின் பரம்பலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 751,585 வீட்டுக்கூறுகளும் , மன்னார் மாவட்டத்தில் குறைந்தளவாக 38,999 வீட்டுக்கூறுகளும் பதிவாகியுள்ளதாக இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇