இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற இலங்கை சிறுவன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற டாவி சமரவீர, இன்று (26.01.2026) அதிகாலை நாடு திரும்பினார்.

அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின் OV-437 என்ற இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பஹ்ரைனில் இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற தொடரிலிலேயே டாவி சமரவீர வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல், கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இன்னும் 10 வயதேயான டாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் ஒரு மாணவராவார்.

டாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார்.

அவர் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை விசேட அம்சமாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects