இளம் பருவத்தினர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநல சுகாதார மேம்பாடு மற்றும் ஆலோசனை, தொழில் வழிகாட்டல் தொடர்பாக சுகாதார உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மனநல மருத்துவ பிரிவின் வைத்திய வைத்திய அதிகாரிகள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள இளம் பருவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி தற்போதைய நிலமையில் கல்வி, சுகாதார துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பாடசாலை சூழல்களுக்குள் மன நலம் மற்றும் பால் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்புடைய சிக்கல்களை தடுத்தல் மற்றும் முன்கூட்டியே பரிந்துரைத்தல், பின் தொடர்தல் ஆகியவற்றைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு ஆலோசனை, தொழில் வழிகாட்டல் போன்ற விழிப்பூட்டல் பயிற்சி நெறிகள் மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் சுகாதார உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மாதாந்தம் இடம்பெற்ற வருகின்றன.
இதற்கமைய ஐந்து கல்வி வலய பாடசாலைகளின் 35 சுகாதார உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மனநல சுகாதார மேம்பாடு மற்றும் ஆலோசனை, தொழில் வழிகாட்டல் பயிற்சி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக மனநல மருத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் அருள்ஜோதி, மனநல மருத்துவ மையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சௌந்தர ராஜா உட்பட மனநல மருத்துவ வைத்திய பிரிவு வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇