கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 10.04.2025 அன்று கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெம்பு கடற்கரையில் Clean Sri lanka வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக இக் கடற்கரை பகுதி துப்பரவு செய்யப்பட்டது.
தூய்மைப்படுத்தல் செயற்பாடு காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் வேலைத்திட்டதில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயந்தி திருச்செல்வம், கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் R.கங்காதரன், பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கும்புறுமூலை மீனவ சங்க உறுப்பினர்கள், கும்புறுமூலை விபுலானந்தா இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் கிண்ணையடி வெண்ணிலா இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










