இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மாதம் 50 ஆயிரத்து 395 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய சுற்றுலாப்பயணிகளும், 4,554 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும், 3,269 சீன சுற்றுலாப்பயணிகளும், 3,180 ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளும் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇