மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி பீ.தம்மிக்கவின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 1615.07.2025 அன்று குறித்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காணிப் பிரச்சினை, வனவள பாதுகாப்பு, மணல் அகழ்வு, யானை முதலை பிரச்சினைகள், உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் கழிவகற்றல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டதுடன் சில பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக்கு அமைவாக குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects