மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை…

தற்காலத்தில் இளம்பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் பெண்மணிகளில் சிலருக்கு அவர்களுடைய மார்பகப் பகுதியில் பைலோட்ஸ் கட்டி எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இத்தகைய கட்டி தீங்கற்றது என்றாலும் வைத்தியரிடம் உரிய தருணத்தில் காண்பித்து முறையான சிகிச்சையை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்முடைய பெண்கள் மற்றும் பெண்மணிகளின் மார்பகப் பகுதியில் பைலோட்ஸ் கட்டி ஏற்பட்டிருக்கக்கூடும்.

இத்தகைய கட்டி அரிதானது என்றாலும் சிலருக்கு ஏற்படக்கூடும். இவை பெரும்பாலும் புற்றுநோயாக மாறாத தீங்கு விளைவிக்காத கட்டியாகும்.

ஆனால் சிலருக்கு இத்தகைய பைலோட்ஸ் கட்டி மார்பகப் பகுதியில் ஏற்பட்டு விரைவாக வளர்ச்சி அடைந்தால் உடனடியாக வைத்தியர்களிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இத்தகைய கட்டி மிக அரிதாக புற்றுநோயாக மாறக்கூடும் வாய்ப்பு இருப்பதால் இதனை முறையாக பரிசோதித்து கொள்ள வேண்டும்.

பைலோட்ஸ் கட்டியை மருத்துவ மொழியில் ஃபைப்ரோ எபிதீலியல் நியோபிளாஸம் என குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய கட்டி 90 சதவீதம் தீங்கற்றது. தீங்கை விளைவிக்க கூடியது அல்ல எனினும் 250 நபர்களில் ஒருவருக்கு அவை புற்றுநோயாக மாறக்கூடிய சாத்தியம் உண்டு.

மேலும் இத்தகைய கட்டியை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதை விட பயாப்ஸி செய்து உறுதிப்படுத்திக் கொள்வது தான் சிறந்தது என்றும் வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் இத்தகைய கட்டி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பரிசோதனைகள் நிறைவடைந்த பிறகு சத்திர சிகிச்சை மூலம் இத்தகைய கட்டி அகற்றப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் இத்தகைய கட்டிகள் மீண்டும் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒரு முறை சத்திர சிகிச்சை மூலம் இந்த கட்டியை அகற்றியவர்கள் ஓராண்டுக்கு மேலாக தொடர்ச்சியாக வைத்தியர்களின் அவதானிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

வைத்தியர் ஸ்ரீ தேவி

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects