இடுப்பு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நரம்பியல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை…..
இன்றைய திகதியில் பிரசவத்திற்கு பிறகு பெண்மணிகளில் பலருக்கும் நாட்பட்ட இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதனை அவர்கள் வழக்கமான வலி என உறுதிப்படுத்திக் கொண்டு, இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவர்.
ஆனால் இது பெல்விக் கன்ஜஸன் சிண்ட்ரோம் (Pelvic Congestion Syndrome) பாதிப்பாக இருக்கலாம் என்றும், இதற்காக உடனடியாக பெண்மணிகள் வைத்தியர்களை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
இடுப்பு நரம்புகளில் ஏற்படும் இறுக்க பாதிப்பு என மருத்துவ மொழியில் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக ஆண்களுக்கு கால் பகுதியில் ஏற்படும் வெரிகோசிஸ் வெயின் எனப்படும் சுருள் சிரை நரம்பு பாதிப்பு மேலும் தீவிரமடைந்து பெண்களின் கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவும் போது இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
பொதுவாக பெண்மணிகளுக்கு இடுப்பு வலி ஏற்பட்டு, அது ஆறு மாத காலத்திற்கு பிறகும் தொடர்ந்து இருந்தால் அது இத்தகைய இடுப்பு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நரம்பு இறுக்க பாதிப்பு என வகைப்படுத்தப்படுகிறது. மேலும் சில பெண்மணிகளுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படும் தருணங்களில் இடுப்பு மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் தாங்க இயலாத வலி ஏற்படும். இதுவும் இத்தகைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
எம்முடைய இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் தடை காரணமாக கருப்பை பகுதியில் உள்ள நரம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் சிலருக்கு நரம்புகளின் வெளிப்பகுதியில் ஏற்படும் சுருக்கத்தின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
இதன் போது வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். அதனை தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். சிலருக்கு இதன் போது பிரத்யேகமான சத்திர சிகிச்சைகளும் அவசியப்படலாம். மேலும் வைத்தியர்கள் ஹோர்மோனல் சிகிச்சையும் மேற்கொண்டு இதற்கான நிவாரணத்தை வழங்குவர்.
வைத்தியர் ப்ரீத்தி சர்மா – தொகுப்பு அனுஷா
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇