எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தில் செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த விசேட வேலைத்திட்டத்தின் பணிகள் நாளை (12.11.2024) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் நாளை (12.11.2024) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு விசேட வேலைத்திட்டம் செயல்படவுள்ளமை குறிப்பிடதத்க்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇