புகையிரத சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (14.11.2024) இயக்கப்படவிருந்த 10 புகையிரதப் பயணங்கள் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 22 தொடருந்து பயணங்களை நடத்துவது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பணியமர்த்தாத காரணத்தினால் குறித்த பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக மேலும் தெரிவித்தனர்.
இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇