புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் முழுமையான விபரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

முதலாவதாக புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் – விஜித்த ஹேரத்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் – ஹர்ஷன நாணயக்கார

உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சர் – சந்தன அபேரத்ன

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் – கே.டி. லால்காந்த

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு -அநுர கருணாதிலக

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை – சுனில் குமார கமகே

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் – ராமலிங்கம் சந்திரசேகர்

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை – உபாலி பன்னிலகே

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் – சுனில் ஹந்துன்னெத்தி

பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் – ஆனந்த விஜேபால

போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் – பிமல் ரத்நாயக்க

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் : Dr. நலிந்த ஜயதிஸ்ஸ

புத்தசாசன, சமயவிவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் – பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவி

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் – சமந்த வித்யாரத்ன

வர்த்தக, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் – வசந்த சமரசிங்க

விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சர் – பேராசிரியர் கிரிஷாந்த சில்வா

சக்தி வலு அமைச்சர் – குமார ஜயகொடி

சுற்றாடல் அமைச்சர் – கலாநிதி தம்மிக பட்டபதி மற்றும் தொழில் அமைச்சராக – அனில் ஜயந்த ஃபெர்ணாண்டோவும் பதவியேற்றுக் கொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects