தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் நாளை (21) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇