ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் முதல் மர செயற்கைக்கோள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மர செயற்கைக்கோள், செவ்வாய்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுகளில் மரங்களைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப சோதனையாக இது அனுப்பப்பட்டுள்ளது.

நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வில் மரங்களைப் பயன்படுத்துவதற்கான முதற்கட்ட சோதனையாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மர செயற்கைக்கோள் செவ்வாய்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஹோம்பில்டர் சுமிடோமோ ஃபாரெஸ்ட்ரியால் உருவாக்கப்பட்டு, ஸ்பேஸ் எக்ஸ் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பூமிக்கு மேலே சுமார் 400 கிமீ (250 மைல்) சுற்றுப்பாதையில் விடப்படும்.

“மரம்” என்பதற்கான லத்தீன் வார்த்தையின் பெயரால் பெயரிடப்பட்ட, உள்ளங்கை அளவிலான லிக்னோசாட், மனிதர்கள் விண்வெளியில் வாழ்வதை ஆராயவும் அங்குள்ள புதுப்பிக்கத்தக்க பொருட்களின் திறனை நிரூபிக்கவும் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

“மரம், நாம் வளர்க்கக்கூடிய ஒரு பொருள், இதை வைத்து நாம் வீடுகளை உருவாக்க முடியும். அதனைப் பயன்படுத்தி விண்வெளியில் வாழவும் வேலை செய்யவும் முடியும்,” என கியோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனித விண்வெளி நடவடிக்கைகள் ஆய்வு குறித்து விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட, விண்வெளி வீரர் டாக்கோ டோய் கூறினார்.

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல் மற்றும் மர வீடுகளை கட்டுதல் போன்ற 50 ஆண்டு திட்டத்துடன், டாக்கோ டோயின் குழு, மரம் ஒரு விண்வெளிக்கு ஏற்ற பொருள் என்பதை நிரூபிக்க நாசா சான்றளிக்கப்பட்ட மர செயற்கைக்கோளை உருவாக்க முடிவு செய்தது.

இதற்கிடையே, “1900களின் முற்பகுதியில் விமானங்கள் மரத்தால் செய்யப்பட்டன” என்று கியோட்டோ பல்கலைக்கழக வன அறிவியல் பேராசிரியர் கோஜி முராடா கூறினார். “அதேபோல் ஒரு மர செயற்கைக்கோள் கூட சாத்தியமானதாக இருக்க வேண்டும்.”

ஒரு மர செயற்கைக்கோள் அதன் வாழ்நாளின் முடிவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளி குப்பைகளாக மாறாமல் இருக்க மீண்டும் வளிமண்டலத்தில் நுழைய வேண்டும். வழக்கமான உலோக செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழையும் போது, அலுமினிய ஆக்சைடு துகள்களை உருவாக்குகின்றன, ஆனால் மரத்தாலானவை குறைந்த மாசுபாட்டுடன் எரிந்துவிடும்.” என்று டாக்கோ டோய் கூறினார்.

“உலோக செயற்கைக்கோள்கள் எதிர்காலத்தில் தடைசெய்யப்படலாம்” என்று கூறிய டோய், “எங்கள் முதல் மர செயற்கைக்கோள் படைப்புகளை நிரூபிக்க முடிந்தால், அதை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க விரும்புகிறோம்.” எனவும் கூறினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 10 மாத சோதனைக்குப் பிறகு, ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் பாரம்பரியமாக வாள் உறைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மாக்னோலியா மரமான ஹோனோகி மரம் விண்கலத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

குறிப்பாக லிக்னோசாட்டில், ஸ்குரு அல்லது பசை போன்ற எந்த பொருளும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பாரம்பரிய ஜப்பானிய கைவினை நுட்பத்தைப் பயன்படுத்தி ஹோனோகியால் லிக்னோசாட் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டதும், லிக்னோசாட் ஆறு மாதங்களுக்கு சுற்றுப்பாதையில் இருக்கும், விண்வெளியின் தீவிர சூழலை மரம் எவ்வாறு தாங்குகிறது என்பதை அதில் இணைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் கூறுகள் அளவிடும், அங்கு வெப்பநிலை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் -100 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

லிக்னோசாட், செமிகண்டக்டர்களில் விண்வெளி கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் மரத்தின் திறனை அளவிடும், இது டேட்டா சென்டர் கட்டுமானம் போன்ற பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சுமிடோமோ ஃபாரஸ்ட்ரி சுகுபா ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாளர் கென்ஜி கரியா கூறியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects