ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் “ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலா தளமான காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று (29.07.2025) இடம்பெற்றது.
இச் சிரமதான நிகழ்வு, மட்டக்களப்பு குருக்கள்மடம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருக்கள்மடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரஞ்சன் பகல்ல தலைமையில் இடம்பெற்றது.
சிரமதானத்தின் போது கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய முறையான அகற்றும் நடவடிக்கைகள் நகர சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










