மட்டக்களப்பில் சமுர்த்தி அருணலு கடன் வேலைத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வானது சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (10) இடம் பெற்றது.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நுகர்வு தேவைகளை பலப்படுத்தும் செயற்திட்டமாக இத் திட்டம் காணப்படுகின்றது.
இந் நிகழ்வின் சமுதாய அமைப்பு மாவட்ட முகாமையாளர் பகிரதன் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்கள், தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇