இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
அந்த அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது , விநியோக வலையமைப்புக்கா கிலோவுக்கு 8 முதல் 10 சதவீதம் வரை செலவழிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇