தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வொன்று 12.12.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் குறித்த தெளிவூட்டல் செயலமர்வு இடம் பெற்றது.
மனித உரிமைகள் தினத்தை ஒட்டி மனித உரிமை கல்வி தொடர்பாக இடம் பெற்ற குறித்த தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் எம்.ரகுநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஹிசைடீன், சமூக செயற்பாட்டாளர் கலாநிதி செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் கதிர் பாரதிதாசன், தொழிலதிபர் மோ.சுதாகரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 12.30 வரை இடம் பெற்ற செயலமர்வில் பயனாளிகளாக இளைஞர் யுவதிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇