ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதமான அளவில் சீரற்ற காலநிலை காரணமாக திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி கலா வாவிக்கு வினாடிக்கு 3,230 கன அடி நீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (17.12.2024) பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் இவ்வாறான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.