இலங்கை வந்துள்ள சீன பல்கலைக்கழக மாணவர்கள் குழு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகத்தில் (Chinese University of Hongkong) கல்வி கற்கும் 16 இளங்கலை மாணவர்கள் ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் குழு இன்று (27.12.2024) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

இந்த மாணவர்கள் “இலங்கையில் பெண்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றை தயாரிக்க உள்ளனர்.

இது தவிர ஜா-எல, பமுனுகம கொன்சால்வ்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களின் உதவியுடன் மற்றுமொரு செயற்திட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுப் பயணத்தின் பின்னர், இந்த மாணவர்கள் சீகிரியா மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் , இந்த 10 நாள் விஜயத்தில் குறித்த மாணவர்கள் குழுவிற்கு தேவையான வசதிகளை கிறிஸ்தவ இளைஞர்கள் சங்கம் (YMCA) வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects